எனது கர்த்தரின் ராஜாங்க

எனது கர்த்தரின் ராஜாங்க
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?

மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும், என்றாரே,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே

1. தேவ துாதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்துபோகவே – மனிதசுதனின்

2. துாதர் எக்காளத்தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே,
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே,
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே,
பாவ மனுன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே – மனிதசுதனின்

3. ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்,
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்,
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார் – மனிதசுதனின்

4. எருசலேமி லிருந்த ஜீவ நதிகள் ஓடுமே,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே,
வருமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நாடுமே,
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே – மனிதசுதனின்

5. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே,
சந்தோத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்த பிடிக்குமே,
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே – மனிதசுதனின்



enathu karthdharin rajanka

enathu karthdharin rajanka
eppo varukumo?
eengkum en kavalai neengka makizhchi
eppo perukumo?

manidhasudhanin adaiyalam vinnil kanum, enrare,
vallamaiyodu makimaiyayth thondri varuven endrare

1. theva thudharin kadaisi ekkalam ton muzhangkave,
jakaththil eesuvaib patrri mariththor uyirththezhumpave,
jeevanullorum avarutan maru rupamakave,
jakaththil pakdharkal karthdharitaththuk kezhunththubokave – manidhasudhanin

2.
thudhar ekkalaththoniyil ennitam serbben endrare,
sodhanai kalanthdhanil dhabpavunnaik kabben enrare,
badhaka manujathi vedhanai adaiyum endrare,
bava manshan thondri nasamayb povan endrare – manidhasudhanin

3. jathikadkuk kodiyay iisayin veran reruvar,
chakalarum avar kodiyin kazh vanththu paninththu suzhuvar
nathiyayth thane mesiya engkum aalukai seyvar,
nithdham pirabukkalum niyayamayth thuraithdhanam seyvar – manidhasudhanin

4. eruchalemi lirunthdha jeeva nathikal oodume,
eezhaikal mana makizhnththu karthdharai eeththib badume,
varumayiram alavum bumiyil palankal nadume,
vanarassiya senaikal yavum vanththu kudume – manidhasudhanin

5. chanjchalangkalum dhavibbukal yavum oodib pokume,
sanththoththodu makizhssiyum vanththu sarnthdha bidikkume,
nenjcha makizhnththu neethimankalin vay thuthikkume
niththiya jeevanaib pera endran manam thudikkume – manidhasudhanin